செய்திகள்

தமிழ் பற்றாளரும் நடிகருமான ஓவியர் வீரசந்தானம் காலமானார்

Published On 2017-07-14 00:17 IST   |   Update On 2017-07-14 00:17:00 IST
பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார்.
சென்னை:

பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார்.

தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான பணிகளை மேற்கொண்டார். ஆனால் நேற்று மாலை திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.



தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகம் இவரது ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஓவியங்கள் மட்டுமல்லாது பீட்சா, கத்தி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பையும் வீரசந்தானம் வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News