செய்திகள்
சென்னை நிதி நிறுவன ஊழியர் கொலை: அரியலூர் கோர்ட்டில் வாலிபர் சரண்
சென்னை நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரியலூர்:
சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55). அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15-ந்தேதி வசூலித்த பணத்துடன் நிதி நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். கோயம்பேடு மார்க்கெட் அருகே செல்லும் போது , அங்கு வந்த ஒரு கும்பல் தண்டபாணியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகள் ராஜகோபால், அருணாசலம் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணத்தை சேர்ந்த பாலாஜி (21) என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் இன்று காலை அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் சரணடைந்தார். அவரை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.