செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தி.மு.க. சார்பில் ரத்த தான முகாம்

Published On 2017-06-20 19:33 IST   |   Update On 2017-06-20 19:33:00 IST
திமுக தலைவர் கலைஞர் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தி.மு.க. தலைவர் கலைஞரின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய பொருப்பாளர் தருமதுரை, சிவஜோதி, கண்ணன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இராசா துவக்கி வைத்தார்.

திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் 74 பேர் ரத்தானம் செய்தனர். அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்தவங்கி குழுவினர் ரத்தம் பெற்று சென்றனர்.

முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைபிரிவு அமைப்பாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News