செய்திகள்

வேதாரண்யம் அருகே வயலில் மாடு மேய்ந்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

Published On 2017-06-02 17:26 IST   |   Update On 2017-06-02 17:26:00 IST
வேதாரண்யம் அருகே வயலில் மாடு மேய்ந்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கைலவனம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(61). இவர் அந்த பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்திருந்தார். அதை அறுவடை செய்வதற்காக தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்தார். அப்போது வயலில் அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் தன் மாட்டை மேய விட்டுக் கொண்டிருந்தாராம்.

இதைப்பார்த்த பழனிவேல் ஏன் இப்படி எள் சாகுபடி வயலில் மாட்டை விட்டு சேதப்படுத்துகிறாய் எனக் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த முத்துவேல், பழனிவேலை தரக்குறைவாக பேசி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பழனிவேல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News