செய்திகள்
நாகையில், நாளை அ.தி.மு.க. (புரட்சிதலைவி அம்மா)செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
நாகையில், நாளை அ.தி.மு.க. (புரட்சிதலைவி அம்மா) அணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.
நாகப்பட்டினம்:
நாகையில் நாளை அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாகை மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித் திடலில் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் வரவேற்று பேசுகிறார்.
இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேரூரையாற்றுகிறார். மேலும் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், மா.பா. பாண்டியராஜன், எஸ்.பி. சண்முக நாதன், ராஜ கண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் எஸ். நாகராஜன் நன்றி கூறுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள்,பேரூர், கிளை. நிர்வாகிகள் கலந்து கொள்ளும் படி நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா ) சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.