செய்திகள்
10–ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்
10–ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் வருகை புரியாதோர் சிறப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
10–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்காக சிறப்பு துணை பொதுத்தேர்வு அடுத்த மாதம் 28–ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 6–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் மற்றும் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வருகறி 31–ந்தேதி(புதன்கிழமை) முதல் 3–ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175–ஐ விண்ணப்பிக்கும் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஹால் டிக்கெட்
மேலும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கும். அதன்மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.