செய்திகள்

கொடி கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்

Published On 2017-05-28 13:25 GMT   |   Update On 2017-05-28 13:25 GMT
சீர்காழி அருகே கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள இளைய மதுக்கூடம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடி கம்பத்தை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டனர்.

மேலும் கொடி கம்பத்தில் இருந்த சிறுத்தைகள் சிலையை தூக்கி சென்று விட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள் திருவெண்காடு- இளைய மதுக்கூடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ரோட்டில் முள் வேலியை தூக்கி போட்டு இந்த மறியல் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமை தாங்கினார். இதில் வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மோகன் கண்ணன், ரவி மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News