செய்திகள்
மயிலாடுதுறை அருகே மின் தடையால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை பகுதியில் நேற்று இரவு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் தூக்கமின்றி பெரிதும் அவதி அடைந்தனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா நல்லத்துக்குடி கிராமத்தில் அம்பேத்கர் நகர், வடக்கு நகர், வி.ஐ.பி. நகர், நடுத்தெரு ஆகிய இடங்களில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நேற்று இரவு எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் தூக்கமின்றி பெரிதும் அவதி அடைந்தனர். இரவு முழுவதும் மின் தடை இருந்ததால் பெரியவர்கள் ,குழந்தைகள், நோயாளிகள் என அனைவரும் விடிய விடிய பாதிப்பு அடைந்தனர்.
இது குறித்து மின் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் போனில் மின்தடை பற்றி புகார் கூறிய போது போனை எடுத்தவர் அனைவரும் மதுபோதையில் உள்ளனர். காலையில் புகார் செய்யுங்கள் என்று கூறியதால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.