செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் பயங்கரம்: வாலிபர் அடித்துக்கொலை

Published On 2017-05-22 20:41 IST   |   Update On 2017-05-22 20:41:00 IST
கந்தர்வக்கோட்டை அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருச்சி  சாலையில்   நாவல் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு இன்று காலை பொதுமக்கள் சென்றனர். அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி அப்பகுதியினர் கந்தர்வக்கோட்டை போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம்     தெரியவில்லை. குடிபோதையில் யாராவது அடிக்துக்கொலை செய்து விட்டு   பிணத்தை இங்கு போட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News