செய்திகள்

பவானிசாகர் அருகே விவசாயி சரமாரி வெட்டிகொலை: போலீசார் விசாரணை

Published On 2017-05-10 17:56 IST   |   Update On 2017-05-10 17:56:00 IST
பவானிசாகர் அருகே விவசாயி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்காதல் காரணமாகதான் நடந்திருக்ககூடும் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புங்கர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 40). விவசாயி அதே பகுதி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (37).

மகேந்திரன் ஆனந்தனுக்கு 2 லட்சம் பணம் கடன்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேந்திரன் வீட்டுக்கு ஆனந்தன் இரவு சென்றார் அங்கு மகேந்திரன் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு கோபத்துடன் அரிவாளுடன் வந்த ஆனந்த் மகேந்திரனை சரமாரியாக வெட்டினார்.

இதில் மகேந்திரன் அலறினார். உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது. உடனே அங்கிருந்து ஆனந்த் தப்பி ஓடிவிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்த மகேந்திரனை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொலையாளி ஆனந்தை பிடிக்க வலைவீசி உள்ளனர்.

இந்த கொலைக்கு பணம் கொடுங்கல்-வாங்கல் காரணமா?அல்லதுகள்ளக் காதல் காரணமா? என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள். கள்ளக்காதல் காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்ககூடும் என போலீசார் கருதி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News