செய்திகள்

சிவகங்கை அருகே இன்று டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2017-04-11 18:44 IST   |   Update On 2017-04-11 18:44:00 IST
சிவகங்கை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை:

நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் அகற்றப்பட்டன. இந்த கடைகளை நகருக்குள் அமைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு அந்தந்த குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலை மறியல், முற்றுகை போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை தாலுகா படமாத்தூர் பகுதியிலும் இன்று டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை-தொண்டி சாலையில் இந்த மறியல் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதன் காரணமாக மதுரை-சிவகங்கை இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் வந்து மக்களை சமரசம் செய்தனர்.

Similar News