செய்திகள்

சிவகங்கையில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்: 16 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2017-04-10 17:31 IST   |   Update On 2017-04-10 17:31:00 IST
அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெடுமரம் அருகே உள்ள மல்லாங்கோட்டையில் நேற்று அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கர் திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய சோலைமலை, ராகவன், சுப்பிரமணி, படைத்தலை வன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இதேபோல் சிங்கம் புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தாக கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த ஆசைத்தம்பி, செல்வம், செந்தில்வேலன், குமரன், காந்தி ஆகிய 5 பேர் மீது சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்துள்ளார்.

திருக்கோஷ்டியூர் கணேசபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக சிதம்பர பாண்டியன், திருமாறன், சம்பத்நாச்சியப்பன், கணேஷ், செல்வம் ஆகிய 5 பேர் மீதும், திருப்பத்தூர் தாலுகா நாச்சியாபுரத்தில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்திய இருதயராஜ், சீனிராஜ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதவு செய்துள்ளனர்.

Similar News