செய்திகள்

ஆர்.கே.நகரில் ஆர்.வி.ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

Published On 2017-04-09 16:43 IST   |   Update On 2017-04-09 18:18:00 IST
42-வது வட்டம் எம்சிஎம் கார்டன் 3 வது தெரு மற்றும் ஆரணி கெங்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதிகளின் தேர்தல் பொறுப்பாளரும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.

காஞ்சீபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 42-வது வட்டம் எம்சிஎம் கார்டன் 3 வது தெரு மற்றும் ஆரணி கெங்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதிகளின் தேர்தல் பொறுப்பாளரும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.

வேட்பாளர் மதுசூதனனுடன் அப்பகுதிகளில் பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் சென்று இரட்டை விளக்கு மின் கம்பத்திற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது எளிமையின் இலக்கணமாக விளங்கி அம்மாவின் அரசியல் வாரிசாக உள்ள ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மண்ணின் மைந்தன் மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின்கம்ப சின்னத்திற்கே எங்கள் வாக்குகள் என உறுதி அளித்தனர்.

வாக்கு சேகரிப்பில் காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், நாகம்மாள், வழக்கறிஞர் கண்ணன், டி.யோகனந்தம், என்.சிதம்பரம், டபிள்யூ.கே.சரவணன், ஆர்.ஜெயகாந்தன், நீலமேகம், மஹப்பு ஷெரீப், சீனிவாசன், முனுசாமி, நத்தப்பேட்டை வினோத், ஏரிவாய் சுரேஷ், பிரஸ் குமார், பன்னீர்செல்வம், பிள்ளையார்பாளையம் ராஜேந்தரன், வி.நாகராஜ் ஈடுபட்டனர்.

Similar News