செய்திகள்
தேவகோட்டை அருகே வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேவகோட்டை:
தேவகோட்டையில் உள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன் (வயது65), ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணமான ஒரு மகள் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக ராமநாதன் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூருக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது இது குறித்து அந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ராமநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 14 பவுன் நகையும், ரூ.15 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமநாதன் தேவகோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.