செய்திகள்

மாமல்லபுரத்தில் ஜெர்மனி பெண் கற்பழிப்பு: சுற்றுலாத்துறை உதவியை நாடும் போலீசார்

Published On 2017-04-07 13:26 IST   |   Update On 2017-04-10 13:01:00 IST
மாமல்லபுரத்தில் ஜெர்மனி பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு சுற்றுலாத்துறையினர் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.
மாமல்லபுரம்:

ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். கடந்த 2-ந்தேதி அவர் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் கடலில் குளித்து விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் லோமன் ஜென்னுவை கத்தி முனையில் மிரட்டி அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கி சென்றனர். பின்னர் அவரை கற்பழித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. பழைய குற்றவாளிகளை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றிய விவரம் கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

இதையடுத்து சுற்றுலாத் துறையினர் உதவியை போலீசார் நாடி உள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் பற்றிய விபரத்தை கேட்டு உள்ளனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் (பொறுப்பு) ராஜாராமிடம் கேட்ட போது, ‘‘மாமல்லபுரத்தில் இருந்து வெளிநாட்டவர் சூரிய குளிலுக்காக 8 கிலோ மீட்டர் தூரம் வரவேண்டிய அவசியம் இல்லை. போலியான சுற்றுலா வழிகாட்டிகள் பலர் உள்ளனர்.

எங்களிடம் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளி நாட்டவர்கள் வழிகாட்டிகள் கேட்பது இல்லை. அதனால் அவர்கள் போலியான வழிகாட்டிகளை வைத்து சிக்கலில் மாட்டி வருகிறார்கள்.

மாமல்லபுரத்தில் உள்ள வழிகாட்டிகள் விபரத்தை போலீசார் கேட்டுள்ளனர். அதனை கொடுத்து உள்ளோம் என்றார்.

Similar News