செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் காயம்
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தோப்புத்துறையைச் சேர்ந்தவர் நெய்னாமுகமது. இவரது மகன் முகமதுஇஸ்மாயில் (வயது 15). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று டியூஷனுக்கு சென்றுவிட்டு மெயின் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது நாகை-வேதாரண்யம் சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் வெங்கடேஷ்(27) என்பவர் முகமது இஸ்மாயில் மோதி அவரும் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதில் காயமடைந்த முகமது இஸ்மாயில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், வெங்கடேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.