செய்திகள்
கணவர் மது குடிப்பதை நிறுத்தாததால் விரக்தியில் பெண் தற்கொலை
பவானிசாகர் அடுத்த பகுத்தம்பாளையம் பகுதியில் கணவர் மது குடிப்பதை நிறுத்தாததால் மனவேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அடுத்த பகுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி வீரலட்சுமி (வயது43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மயில்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் மயில்சாமி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை வீரலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் மயில்சாமி மகன்களுடன் தூங்க சென்று விட்டார். மனவேதனையுடன் இருந்த வீரலட்சுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் கண்விழித்து பார்த்த மயில்சாமி தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வீரலட்சுமி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.