செய்திகள்

முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு

Published On 2017-02-17 18:54 GMT   |   Update On 2017-02-17 18:54 GMT
சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள 
நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது.

இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் 
திருநாவுக்கரசர் நேற்று தெரிவித்து இருந்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கல் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று சிறிது குழப்பம் 

ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் 

எம்.எல்.ஏ.க்கள்  வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். துணைத் தலைவர் 

ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாவதாக கூறப்படுகிறது

திருநாவுக்கரசர் சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் 

இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் 

தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Similar News