பொன்னமராவதியில் இலவச மருத்துவ முகாம்
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கட்டுமானப்பொறியாளர்கள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு கட்டுமானப்பொறியாளர்கள் சங்கத்தலைவர் வி.என்ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார்.
அரிமா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.திருநாவுக்கரசு, மீனாட்சி மருத்துவமனை பி.ஆர்.ஓ. எஸ்.மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்க செயலர் சிவ அன்பு இளங்கோ வரவேற்றார். பொறியாளர் எம்.மனோகரன் முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில் மீனாட்சி மிஷன் மருத்துவக்குழுவினரால் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் எம்.ராமநாதன், பிஎல்ஆர்.நாகராஜன், சி.ஜெயராஜ், பிஎல்.பவளவண்ணன், டி.செந்தில், அரிமா சங்கத்தலைவர் ஆர்எம்.வெள்ளைச்சாமி, செயலர் என்.ஏ.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.