செய்திகள்

பவானிசாகரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2017-01-30 16:08 IST   |   Update On 2017-01-30 16:08:00 IST
பவானிசாகரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சத்தியமங்கலம்:

பவானிசாகர் மேற்குவீதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது23). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

புவனேஸ்வரிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறபடுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் புவனேஸ்வரி வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சிவராமன் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை புவனேஸ்வரி குடித்தார். இதனால் மயக்கம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்முத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News