செய்திகள்
ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ரூ.70 லட்சத்துடன் மோசடி கும்பல் தப்பியோட்டம் - 3 பேர் கைது
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ரூ.70 லட்சத்துடன் மோசடி கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர்:
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் அரிகரன். இவர் தன்னிடம் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும்படி தியாகராய நகரில் உள்ள கும்பலிடம் பேசினார்.
அவர்கள், அரிகரனை திருவான்மியூருக்கு பணத்துடன் வருமாறு தெரிவித்தனர். மேலும் பழைய ரூபாய் நோட்டை மற்ற 45 சதவீத கமிஷனும் கேட்டு இருந்தனர்.
இதனை நம்பிய அரிகரன் பணத்துடன் திருவான்மியூருக்கு சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் ரூபாய் நோட்டுகளை சரிபார்ப்பதாக கூறி ரூ.70 லட்சத்துடன் காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அரிகரன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோசடி கும்பலின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.70 லட்சம் பணத்துடன் மோசடி கும்பல் வாணியம்பாடிக்கு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் வாணியம்பாடிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்று உள்ளனர். பணத்துடன் தப்பியவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.