செய்திகள்

ஆண்டிமடம் அருகே பெண்ணை தாக்கியதாக ஒருவர் கைது

Published On 2017-01-25 17:21 IST   |   Update On 2017-01-25 17:21:00 IST
ஆண்டிமடம் அருகே முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் தேவதுரை மனைவி அந்தோணியம்மாள் (28).  இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த அபிஷேகராயர் மகன் வின்செண்ட் பவுல் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளதாக தெரிகிறது. 

நேற்று வின்செண்ட் பவுல் தனது உறவினர்களான பெரியநாயகசாமி மகன் ஜான்கென்னடி (22), அந்தோணிசாமி மகள் நிரோஸ் ஆகியோருடன் சென்று வீட்டில் இருந்து அந்தோணியம்மாளை வெளியே வரச்சொல்லி அசிங்கமாக திட்டி, கட்டையால் தாக்கி, வீட்டு ஓடுகளை உடைத்துவிட்டு சென்று விட்டதாக அந்தோணியம்மாள் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து வின்செண்ட் பவுலை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Similar News