செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு

Published On 2017-01-25 11:47 IST   |   Update On 2017-01-25 11:47:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் திவாரி, அழகேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் திவாரி, அழகேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இளையான் குடி வட்டம் குமாரகுறிச்சி, நாகமுகுந்தன்குடி, காளையார் கோவில் வட்டம் செம்பனூர், சிவகங்கை வட்டம் சோழபுரம், ஒக்கூர், கல்லல் வட்டம் கொரட்டி, தட்டட்டி ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன் மற்றும் வட்டாட்சியர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Similar News