செய்திகள்

உடையார்பாளையம் அருகே பைக் மோதி முதியவர் பலி

Published On 2017-01-24 17:59 IST   |   Update On 2017-01-24 17:59:00 IST
உடையார்பாளையம் அருகே பைக் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடையார்பாளையம்:

உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் மகன் தெய்வசிகாமணி(வயது 65).விவசாயியான இவர் சுத்தமல்லி-தா.பழூர் சாலை அருகே தனது விவசாய நிலத்தை பார்வையிட்டு பின்னர் அதே சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அதே வழியில் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தேவேந்திரன்(21). தா.பழூரை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.அப்போது சுத்தமல்லி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே நடந்து வந்துகொண்டிருந்த தெய்வசிகாமணி மீது எதிர்பாரத விதமாக தேவேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தெய்வசிகாமணி சம்பவஇடத்தில் பலியானார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News