செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காண கூட்டு முயற்சி தேவை: அன்புமணி ராமதாஸ்

Published On 2017-01-23 04:28 IST   |   Update On 2017-01-23 04:28:00 IST
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து கட்சிகளின் கூட்டு முயற்சி தேவை என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
ஆலந்தூர்:

பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடக்்கும் என அறிவித்து உள்ளது. 23-ந் தேதி(இன்று) சட்டமன்றம் நடக்கும்போது இதை முழுமையான சட்டமாக்க தயார் செய்ய இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் வர இருக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றால் மகிழ்ச்சி. தடை விதித்்து விட்டால் மத்திய அரசுதான் சட்டம் கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசு கொண்டு வந்து உள்ள சட்டத்துக்கு தடை வழங்கப்பட்டால் நிதிநிலை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என மத்திய அரசு உத்்தரவாதம் வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் சட்டத்திருத்்தம் கொண்டு வந்தால் உச்சநீதிமன்றம் தடை செய்ய முடியாது.

மாணவர்களின் உணர்வை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 5 ஆண்டுகளாக இந்த அரசுதான் உள்ளது. 2 நாளில் அவசரமாக சட்டம் கொண்டு வரமுடியும் என்கிறபோது, கடந்த காலத்தில் ஏன் கொண்டு வரவில்லை?. மாணவர்கள் தந்த அழுத்தம் காரணமாக டெல்லிக்கு சென்று அவசரமாக கொண்டு வந்ததால் மாணவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்கின்ற அமைப்பு அது. பீட்டாவை தடை செய்ய வேண்டும். எங்களால் செய்ய முடியாத பணிகளை மாணவர்கள் செய்ய வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர் ஜல்லிக்கட்டில் ஒருமித்த உணர்வு உள்ளது. மது எதிர்ப்பு, ஊழல் எதிர்்ப்பு, நிர்வாக சீர்கேடு, காவிரி மேலாண்மை பிரச்சினையிலும் இந்த உணர்வுடன் மாணவர்கள் போராட முன்வந்தால் மாற்றங்கள் வரும்.

ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வுக்கு கூட்டு முயற்சி தேவை. முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றாக இணைந்து ஸ்தம்பிக்க வைக்்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News