செய்திகள்
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

Published On 2017-01-20 14:14 IST   |   Update On 2017-01-20 14:14:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.
கடலூர்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.

லாரி, ஆட்டோக்கள், ஷேர்ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்களே ஓடின. சினிமா தியேட்டர்களில் காலை மற்றும் மதியகாட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை.

கடை அடைப்பு போராட்டத்தினால் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.



Similar News