செய்திகள்
சீர்காழியில் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
சீர்காழியில் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி குமரகோவில் மேல வீதியை சேர்ந்தவர் பட்டு என்கிற பத்மநாபன் (42). இவர் சீர்காழி ஈஸ்வரி தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று டாஸ்மாக் ஊழியர் மணிகண்டனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தார். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்குமுக தெருவை சேர்ந்தவர் தர்மா என்கிற பிரபாகரன் (35). இவர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று பார் ஊழியர் முத்துச்சாமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
முத்துச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி பிரபாகரனை கைது செய்தார். கைதான பிரபாரகன், பத்மநாபன் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.