செய்திகள்

வேதாரண்யம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம்

Published On 2017-01-17 14:15 IST   |   Update On 2017-01-17 14:15:00 IST
வேதாரண்யம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வீரமணி (28). இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் கபிலனை அழைத்து கொண்டு வேம்பதேவன்காடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வேம்ப தேவன்காடு பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் லெட்சுமணன் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் வீரமணி பலத்த காயமடைந்தார்.

இவரை உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி செய்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News