செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்

Published On 2017-01-16 16:12 IST   |   Update On 2017-01-16 16:12:00 IST
ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கண்டமனூரை சேர்ந்த பெரியகருப்பன் மனைவி சுதா (வயது38). அதே பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (26). இவர் அடிக்கடி சுதாவிடம் தவறான முறையில் பேசி வந்துள்ளார்.

இருந்தபோதும் சுதா அவரை கண்டித்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாமல் சுதா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த பால்பாண்டி வீட்டிற்குள் நுழைந்தார். அவரை பலவந்தபடுத்தி கற்பழிக்க முயன்றார்.

சுதா கூச்சல் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் சுதாரித்த பால்பாண்டி இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சுதா கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News