செய்திகள்

சென்னிமலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-16 12:40 IST   |   Update On 2017-01-16 12:40:00 IST
ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டின் மீதான தடையினை தளர்த்த கோரியும், பீட்டா அமைப்பினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.

சென்னிமலை;

ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டின் மீதான தடையினை தளர்த்த கோரியும், பீட்டா அமைப்பினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர்.

காலை 11 மணிக்கு 2 காங்கேயம் காளை மாடுகளுடன் பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை நகரின் நான்கு ராஜவீதிகளிலும் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பீட்டா அமைப்பினை கண்டித்து கோ‌ஷம் போட்டனர். ஊர்வலத்தை ஈரோடு தொகுதி முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தி.மு.க., சார்பாக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர் சேகர், பாரதிநகர் ஈஸ்வரமூர்த்தி உள்பட நிர்வாகிளும், கம்யூனிட்ஸ் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ம.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் மனோகரன், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன்னையன்.

கீழ்பவானி விவசாயிகள் சங்க நிர்வாகி முருங்கத்தொழுவு ரவி, தமிழின பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி குருசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் குரு நாதன், காங்கிரஸ் கட்சி ஜிசேந்திரன் உள்பட கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News