செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்து: லாரி புக்கிங் அலுவலக ஊழியர் படுகாயம்
வேதாரண்யம் அருகே விபத்தில் லாரி புக்கிங் அலுவலக ஊழியர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாகை சாலையில் லாரி புக்கிங் அலுவலகத்தில் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆசைத்தம்பி (28) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 11-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சென்ற போது நாகை மெயின்ரோட்டில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஆசைத்தம்பி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.