தரங்கம்பாடி அருகே தடையை மீறி ரேக்ளா போட்டி நடத்த முயற்சி: 2 பேர் கைது
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்டையூரில் 30 ஆண்டுகளாக காணும் பொங்கலை முன்னிட்டு குதிரைவண்டி, மாட்டு வண்டிகள் பங்கேற்கும் ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று பொறையார் பெரிய பள்ளிவாசல் அருகே குதிரை, மாடுகள், வண்டிகளுடன் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. தலைமையில் பொறையார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போட்டிக்கு கொண்டுவரப்பட்ட 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காரைக்கால் திருபட்டிணத்தை சேர்ந்த சரவணன், பொறையாரை சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பானது. இதற்கு முன்னர் பொறையார் டி.பி.எம்.எல். கல்லூரி மாணவ, மாணவிகள் ஜல்லிகட்டும், ரேக்ளா போட்டி நடத்த வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ததது குறிப்பிடத்தக்கது.