செய்திகள்

பவானி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவன் மாயம்

Published On 2017-01-13 15:44 IST   |   Update On 2017-01-13 15:44:00 IST
பவானி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு:

பவானி அருகே உள்ள ஜம்பை அடுத்த நத்தக்காடு நல்லிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கருப்புசாமி (வயது 16).

இவர் தளவாய்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவன் கருப்புசாமி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திருப்ப வில்லை. அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை. மாயமாகிவிட்டார்.

இது குறித்து மாணவனின் தந்தை மகாலிங்கம் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.

Similar News