செய்திகள்

வேதாரண்யம் அருகே வீட்டுக்கு தீ வைத்தவர் கைது

Published On 2017-01-13 15:06 IST   |   Update On 2017-01-13 15:06:00 IST
வேதாரண்யம் அருகே வீட்டுக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு அரக்கரை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகள் தங்கம்மாள் மாற்றுத்திறனாளி.

இவர் கடந்த 11-ந்தேதி இரவு உறவினர் வீட்டு வாசலில் பேசி கொண்டிருந்த போது அவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற போது அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவர் தேத்தாகுடி வடக்கு சுப்பிரமணியன் மகன் ராஜகுமார் (38) என்பது தெரியவந்தது.

இது குறித்து தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வீட்டுக்கு தீ வைத்த ராஜகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News