செய்திகள்
மயிலாடுதுறையில் தீபா பேரவை பேனர் கிழிப்பு - மறியல்
மயிலாடுதுறையில் தீபா பேரவை பேனர் கிழிக்கப்பட்டது. இதனை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளிடம் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர், முகவரிகளை தெரிவித்து உறுப்பினர் படிவங்களை பெற்று செல்கிறார்கள்.
தீபா பேரவை தொடர்பான பிளக்ஸ் போர்டுகள் நகரில் பல பகுதிகளில் அவருடைய ஆதரவாளர்களால் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல பகுதிகளில் தீபா பேரவையினர் பேனர்கள வைத்திருந்தனர். அதனை சிலர் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த தீபா பேரவையினர் மயிலாடுதுறை பகுதி நிர்வாகி தட்சிணா மூர்த்தி தலைமையில் மயிலாடுதுறை - கல்லணை சாலையில் மாப்படுகை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.