செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்தில் பெண் படுகாயம்
வேதாரண்யம் அருகே விபத்தில் பெண் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்மாள் (60). இவர் தனது மருமகள் நாகலெட்சுமியுடன் கூலி வேலைக்கு செல்வதற்காக பாலடி வீரன் கோவிலடியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் தங்கம்மாள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். நாகலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.