செய்திகள்

வேதாரண்யம் அருகே நிலம் விற்பனையில் பிரச்சினை: விவசாயி தற்கொலை

Published On 2017-01-04 15:42 IST   |   Update On 2017-01-04 15:42:00 IST
வேதாரண்யம் அருகே நிலம் விற்பனையில் பிரச்சினை ஏற்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருக்கு முருகையன் என்பவருக்கு தனது நிலத்தை விற்றுள்ளார். இதில் தனித்தனியே கிரயம் செய்து கொடுக்க செலவு அதிகம் ஆகும் என்பதால் சுந்தரேசன் தன் பெயருக்கே எழுதி வாங்கிக்கொண்டாராம். நிலத்திற்கு பணம் கொடுத்த முருகையன் எனக்கு நிலத்தை பிரித்து கொடுக்கவில்லையே, பணத்தை வாங்கிக் கொண்டாயே என கேட்டுள்ளார்.

இதுகுறித்து ஆறுமுகம் சுந்தரேசனிடம் கேட்டபோது அவர் பிரித்து கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். இதில் மனம் உடைந்த ஆறுமுகம் வி‌ஷத்தை குடித்து வீட்டு வாசலில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி பொற்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News