செய்திகள்
காஞ்சீபுரத்தில் மணல் திருடிய 8 பேர் கைது
காஞ்சீபுரத்தில் மணல் திருடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் புத்தேரி தெரு, பிள்ளையார் பாளையம், கைலாசநாதர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சிவகாஞ்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலாற்று படுகையில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட கீழம்பி பகுதியைச் சேர்ந்த சேட்டு, துரை, சிதம்பரம், வரதன், தாமோதரன், பார்த்திபன், அருள் தாஸ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.