செய்திகள்

அரக்கோணத்தில் திருட்டை தடுக்க 16 இடங்களில் 44 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

Published On 2016-12-21 16:08 IST   |   Update On 2016-12-21 16:08:00 IST
அரக்கோணம் நகர சாலைகளில் திருட்டை தடுக்க 16 இடங்களில் 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

அரக்கோணம், டிச.21-

அரக்கோணம் நகரச் சாலைகளில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நன் கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் பல இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டன.

இப்பணியை அப் போதைய டி.எஸ்.பி சீதாராமன் மேற்கொண்டு, அலுவலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறை மூலம் அவற்றை கண் காணித்து வந்தார். அவர் மாறுதலாகி சென்ற நிலையில் கேமராக்கள் பராமரிக்கப்படாமல் கண்காணிப்பு பணி நடை பெறவில்லை. இந்நிலையில் அரக் கோணம் நகரில் பல இடங்களில் நகை பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்றன. இதையடுத்து அரக்கோணம் ஏ.எஸ்.பி. சக்திகணேசன் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மீண்டும் தொடங்கி யுள்ளது.

நகரில் 16 இடங்களில் 44 கேமராக்கள் அமைக்கும் பணியில் முதற்கட்டமாக 12 இடங்களில் 30 கேமராக்கள் பொருத்தும் பணி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையும்.

அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு மீதமுள்ள கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

Similar News