செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2016-12-10 22:01 IST   |   Update On 2016-12-10 22:01:00 IST
திருமயம் மனவளான்கரை கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருமயம்:

திருமயம் மனவளான்கரை கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி பொமக்களுக்கு தினமும் ஊராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஒருவாரமாக இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் நேற்று உடனடியாக மனவாளன்கரைக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருமயம்–கடியாப்பட்டி சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் கனகவேல் மற்றும் திருமயம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News