செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்ற 21 பேர் மீது வழக்கு: ரூ.50 ஆயிரம் பறிமுதல்

Published On 2016-12-08 13:38 IST   |   Update On 2016-12-08 13:38:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்றதாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை:

ஜெயலலிதா மறைவை யொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதனை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் அதிரடி கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருட்டுத்தனமாக பலர் மது விற்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து 215 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்து 815 பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுத்தனமாக மது விற்றதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், லைசென்சு இல்லாமல் சென்றது போன்ற குற்றங்களின் கீழ் 371 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

Similar News