செய்திகள்

விபத்தில் பலியான மீன் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நஷ்டஈடு: கோர்ட்டு உத்தரவு

Published On 2016-12-01 22:36 IST   |   Update On 2016-12-01 22:36:00 IST
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பலியான மீன் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நஷ்டஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேவகோட்டை

காரைக்குடியை சேர்ந்தவர் முருகன் மகன் ராமச்சந்திரன்(வயது 23). இவருடைய மனைவி மீனாட்சி. மீன் வியாபாரியான ராமச்சந்திரன், தனது வியாபாரத்திற்காக தினமும் காரைக்குடியில் இருந்து தேவிபட்டினம் கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி வருவது வழக்கம்.

இவர் கடந்த 13–8–2012 அன்று அதிகாலை திருச்சி–ராமேசுவரம் சாலையில் மங்கலம் என்ற கிராமத்தின் அருகே வழக்கம்போல் தேவிப்பட்டினத்தில் மீன் வாங்கிக் கொண்டு காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ராமச்சந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு தேவகோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், விபத்தில் இறந்த ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.13 லட்சத்து 96 ஆயிரத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Similar News