செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

Published On 2016-11-16 13:19 GMT   |   Update On 2016-11-16 13:19 GMT
நீலகிரி மாவட்டத்தில் அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் அரசு இ - சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் புதிய சேவையாக ஆதார் நிரந்தர பதிவு மையம் அனைத்து தாசில்தார் அலு வலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. எல்காட் நிறுவனம் மூலம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சி அலுவலகங்களிலும் மற் றும் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திலும் ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

ஆதார் பதிவு செய்ய ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லை சென்சு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட போட்டோவுடன் கூடிய ஆவணம் ஆகியவை கொண்டு வரலாம்.எனவே இதுவரை ஆதார் பதிவு செய்யாத பொதுமக்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட் மூலம் வழங்கப்படும் இநத சேவையை எவ்வித கட்டணமும் இன்றி ஆதார் பதிவு செய்து கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News