செய்திகள்
சிவகங்கையில் வாலிபரை வழிமறித்து தங்க செயின் பறிப்பு
சிவகங்கையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து தங்க செயினை பறித்து சென்ற ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அம்பேத்கார் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது மேலபிடாவூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜாவை வழிமறித்தார். அவர் நின்றதும் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிவகங்கை போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பாலகிருஷ்ணன் மீது பல வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.