செய்திகள்
வேதாரண்யத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத் துறையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சுதன் (வயது 23). இவர் நாகை சாலையில் உள்ள தியேட்டர் முன்பு ரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.
இவரை வேதாரண்யம் போலீஸ் ஏட்டு பன்னீர்செல்வம் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.