செய்திகள்
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு:
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலோர் தீபாவளிக்கு புதிய ஜவுளிகளை வாங்கி விட்டார்கள்.
இப்போது ஜவுளி கடைகள் போல் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் மொய்க்க தொடங்கி உள்ளது. இதற்காக ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு உள்ளது.
ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொது மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம், வருடா வருடம் பொது மக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஓலி மாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுப்புறக்காற்று மாசுபடுதல் போன்றவைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகரத்தில் வாகனங்கள் மூலமாக விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளி தினம் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஒசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மாசு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
உச்சநீதி மன்றத்தின் அறிவுரையை பின்பற்றி பட்டாசு குறித்து உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு:-
விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யபடும் பட்டாசுகளின் வகைகள் ஒவ்வொரு பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் அவற்றின் அளவுகள் மற்றும் அதனை வெடிக்கும் போது அவை ஏற்படுத்தும் ஒலி மாசு அளவுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
அதிக பட்ச ஒலி அளவான 125 டெசிபல் மேல் ஏற்படுத்தும் எந்த ஒரு பட்டாசும் விற்பனை செய்யக்கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கண்டிப்பாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. உச்ச நீதிமன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்க கூடாது.
இவ்வாறு கலெக்டர் பிரபாபர் கூறினார்.