செய்திகள்

பவானி அருகே மாமியாருடன் தகராறு: மருமகள் தற்கொலை

Published On 2016-10-14 18:07 IST   |   Update On 2016-10-14 18:08:00 IST
பவானி அருகே மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானி:

பவானி அருகே உள்ள சித்தோடு நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். பால்வண்டி டிரைவராக உள்ளார். இவரது மனைவி மேகலா (வயது 30).

இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. நவின் (6), கிஷோர் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மேகலாவுக்கும், அவரது மாமியாருக்கு அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மேகலா வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவில் பேன் கொக்கியில் மாட்டி தூக்கு போட்டு கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

நீண்ட நேரமாகியும் மேகலாவின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் திறக்க வில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அங்கு மேகலா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்னர். உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News