செய்திகள்

வெள்ளோடு அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை- பணம் கொள்ளை

Published On 2016-10-14 15:23 IST   |   Update On 2016-10-14 15:23:00 IST
வெள்ளோடு அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோட்டை அடுத்த கவுண்டச்சி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56) விவசாயி.

தங்கராஜின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் நேற்று பகல் 11 மணிக்கு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பிறகு மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதன்பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவையும் உடைத்துஅதன் உள்ளே இருந்த 8 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

தங்கராஜின் வீட்டை சுற்றிலும் கரும்புகாடு உள்ளது. இந்த கரும்பு காட்டுக்குள் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது.

இது பற்றி வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News