செய்திகள்

காளையார்கோவிலில் தலைமைக் காவலருடன் தகராறு: ஆசிரியர் கைது

Published On 2016-10-01 14:08 IST   |   Update On 2016-10-01 14:08:00 IST
தலைமை காவலருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் அலுவலக பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழக்கோட்டை பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜபாண்டி, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவகங்கை நகர் தலைமை காவலர் ஜான் கென்னடி தடுத்து நிறுத்தினார். இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என கூறியதால், ஆசிரியர் ராஜபாண்டி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர் தலைமை காவலர் ஜான் கென்னடியுடன் கட்டிப்புரண்டு தகராறு செய்தாராம்.

இது குறித்து காளையார் கோவில் போலீசில் தலைமைக்காவலர் ஜான் கென்னடி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செய்யது அலி வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராஜபாண்டியை கைது செய்தார்.

Similar News