செய்திகள்
சிவகங்கையில் கோவிலில் அம்மனின் தங்கத்தாலி திருட்டு போலீசில் புகார்
கோவிலில் புகுந்த மர்ம மனிதர்கள் அம்மனின் தாலி சங்கிலியை திருடி சென்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் பஸ் நிலையம் அருகே விஷ்ணுதுர்கா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர் வைத்தி சுப்பிரமணியன், நேற்று பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்றார்.
இன்று காலை கோவிலுக்கு வந்த அவர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் அம்மனின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க தாலி மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடி சென்றுள்ளதாக அர்ச்சகர் வைத்தி சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார்.
சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பு சாமி வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம மனிதர்களை தேடி வரு கிறார்.